அன்புள்ள ராட்சசி – பகுதி 52
அத்தியாயம் 25 அதன்பிறகு வந்த ஒருவாரம்.. பத்து நாட்கள்..!! அசோக் முழுமையாக மாறிப்போனான் என்று சொல்ல இயலாது.. ஆனால் குறிப்பிடத் தகுந்த மாதிரியாக சில மாற்றங்கள் அவனிடம்..!! அவனுடைய நினைவு எப்போதும் மீராவைத்தான் சுற்றி வந்தது.. அவளை இழந்துவிட்ட துக்கம் அவன் மனதில் எப்போதுமே உறைந்து கிடந்தது.. ஆனால்.. முன்பு மாதிரி கழிவிரக்கத்தில் மூழ்கி அவன் சோர்ந்திருக்கவில்லை.. புகையினாலும், மதுவினாலும் அவனது சிந்தனையை சிதைத்துக் கொள்ளவில்லை..!! மாறாக.. உரம் கொண்டதென நெஞ்சினை மாற்றிக்கொள்ள முயன்றான்.. உடைந்து போய்விடக்கூடாதென […]