அன்புள்ள ராட்சசி – பகுதி 25
அத்தியாயம் 14 அதன்பிறகு வந்த சில நாட்கள்.. மீரா என்ற புதிருக்கான விடையை அறிந்து கொள்வதில்.. அசோக்கிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துகிற நாட்களாகவே அமைந்தன..!! முன்பிருந்தது போலல்லாமல்.. முற்றிலும் மாறுபட்ட ஒரு மீராவை அசோக் அந்த நாட்களில் காண நேர்ந்தது..!! அவளுடைய நடவடிக்கைகளின் அர்த்தத்தை.. அவ்வளவு எளிதாக அசோக்கால் விளங்கிக் கொள்ள முடியவில்லை..!! ஏரியின் மீது நின்று தான் பேசிய ஆவேச பேச்சு.. ஏதோ ஒருவகையில் மீராவை பாதித்திருக்கிறது என்பது மட்டுமே அசோக்குக்கு புரிந்தது..!! அது எந்தவகை […]