ஆண்மை தவறேல் – பகுதி 43
அத்தியாயம் 33 அன்று மாலை வரை அசோக் ஹாஸ்பிட்டலில்தான் இருந்தான். கற்பகத்தின் கணவருக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டான். தனது அக்கவுன்ட்டில் இருந்து ஹாஸ்பிட்டலின் அக்கவுன்ட்டுக்கு பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்தான். உடனடியாய் சிகிச்சை ஆரம்பித்தார்கள். பனிரெண்டு மணிக்கு ஆரம்பித்த அறுவை சிகிச்சை மூன்று மணிக்கு முடிந்தது. அப்புறம் ஒரு அரை மணிநேரம் கழித்துத்தான் ‘இனி பயப்படுவதற்கு எதுவும் இல்லை..’ என்று ஆபரேஷன் செய்த டாக்டர்களில் ஒருவர் வந்து சொல்லி சென்றார். அதன் பிறகுதான் அசோக்கும், கற்பகமும் […]